/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவுகுழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவு
குழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவு
குழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவு
குழந்தை கடத்திய பெண் காவலில் எடுக்க முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்திருக்கலாம் என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய கிருஷ்ணகிரி கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த தனலட்சுமி (35) மற்றும் கடத்தலில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். லைமறைவான விழுப்புரம் செல்வம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். குழந்தையை கடத்தி விற்பனை செய்த இக்கும்பல் மேலும் பல குழந்தைகளை கடத்தி விற்பனை செய்திருக்க வாய்ப்பு இருக்கும் என, போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். குழந்தைகளை கடத்தியதில் முக்கிய பங்காற்றிய தனலட்சுமி மூலம் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் குழந்தைகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இரு ஆண்டுகள் காணாமல் போன குழந்தைகள் குறித்து வந்துள்ள புகார் குறித்த பட்டியல் தயார் செய்ய கோவை ஐ.ஜி., சிவனான்டி உத்தரவிட்டுள்ளார். குழந்தை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி தனலட்சுமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.